நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க அரசும், அதை தொடர மக்களும் தீவிரமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

namakkagaஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பன்னிரண்டு நாட்களை கடந்த இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இதை ஒடுக்கும் முயற்சியாக மத்திய அமைச்சர்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் : டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதா, யார் சொன்னாலும் கவலையில்லை என்றும், முதலமைச்சர் பழனிசாமி சொன்னாலும் எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பாஜக தமிழக தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன், மக்களின் ஒப்புதல் இல்லையென்றால் நிறைவேற்ற மாட்டோம் என்றார். ஆனால் இது மக்களுக்கானது  என்றும் இந்த திட்டம் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பேசியிருப்பதாக கூறினார். என்ன பேசினீர்கள்  என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே விளக்கமாக கூறியுள்ளதாக கூறி மழுப்பியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், நல்லது நடக்கும் என்றால் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறிய பாஜக இல. கணேசனுக்கு வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் அவரது வீட்டில் முன்னுதாரனமாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

எனினும் நெடுவாசலில் போராட்டம் தொடர்கிறது. அதை ஒடுக்க அரசின் மறைமுக வேலைகளும் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு