
ஜூலை 19, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு அக்கட்சியில் 43 பேர் மீது தலைமைக் கழகம் முடிவெடுத்தது.
இந்த முடிவின் தொடர்சியாக பழனிமாணிக்கம் , இன்பசேகரன் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இருவரின் விளக்கத்தை அடுத்து நடவடிக்கை கைவிடப்படுவதாக திமுக தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் முல்லைவேந்தன் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தஞ்சை மாவட்டக் கழகச் செயலாளர் பழனிமாணிக்கமும், தர்மபுரி வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் இன்பசேகரனும் கழக நிர்வாகப் பொறுப்பில் இல்லாமல், கழகத்தில் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
விளக்கம் கோரியபோது கழகத் தலைமைக்கு எதிராக அறிக்கை விடுத்த தர்மபுரி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் முல்லைவேந்தன் கழக உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்து தஞ்சைக்கு திமுக மா.செ. என்று யாரென்று அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.
![]()
