பாஜக கூட்டணியை பார்த்து தமிழகத்தின் ஆணிவேர் கட்சிகள் அஞ்சுகின்றன!- சென்னையில் மோடி அதிரடி பிரச்சாரம்!

modi.chennai

 

சென்னை: ஏப்ரல் 13,
சென்னை மீனம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: –

மத்தியில் இருக்கும் அரசு மக்களுக்கு நேர்மாறான அரசு. காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் இந்த தேர்தலில் வெளிப்படும். தமிழகத்தில் உருவாகியுள்ள பாஜக கூட்டணியை பார்த்து திமுக,அதிமுக கட்சிகள் அஞ்சுகின்றன.

மக்கள் மீது திமுக, அதிமுகவுக்கு அக்கறை இல்லை. தமிழக மக்கள் திமுக,அதிமுக ஆகிய இரு கட்சிகளால் சிக்கி தவிக்கின்றனர். பாஜக அணி சாமன்ய மக்களை உயர்த்தும். மூன்றாவது சக்தியாக பாஜக அணி உருவெடுத்துள்ளது. மாநிலங்களுடன் ஆலோசித்து தேவைகள் நிறைவேற்றப்படும்.

மக்களின் வறுமையையும், ஏழ்மையையும் விளம்பரத்துக்காகக் காங்கிரசு ‘கை’ பயன்படுத்திக் கொள்கிறது. தேர்தல் நேரங்களில் மட்டுமே ஏழைகளின் நினைவு காங்கிரசுக்கு வருகிறது. காங்கிரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பேசினார்.

இந்தியா முழுமைக்கும் எங்கள் கட்சியும், கூட்டணி கட்சிகளும் பெறு மதிப்புடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு