amala-paul

ஏப்ரல் 09, கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களை இயக்கியவர் விஜய். இவர் தற்போது சைவம் என்ற படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழச்சியில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு சைவம் படம் குறித்து புகழ்ந்து பேசினர். அப்போது பேசிய பார்த்திபன் திருவள்ளுவருக்கு கூட அ றத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால் ஆகிய மூன்று பால்களைத்தான் தெரியும். திருவள்ளுவரை விட, விஜய் பெரிய ஆள்.?

அவருக்கு அமலாபாலையே தெரியுமே என்று கிசு கிசு பாணியில் இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் காதல் விவகாரத்தை வெளி உலகிற்கு தெரிவித்தார். தற்போது இயக்குனர் விஜய் அமெரிக்காவில் உள்ளார். இந்த சூழலில் தன்னுடைய காதல் விவகாரத்தை பற்றி தனியாக விளக்கம் அளிக்கும் நிலைமைக்கு ஆளாக்கிய பார்த்திபன் மீது கோபத்தில் உள்ளாராம் அமலாபால்.

இப்படித்தான் சில நேரங்களில் “காதல் கிறுக்கன்” உண்மையில் …………… ஆகிவிடுவார்.

Loading