Springtime in Paris; Spring Inspiration from the City of Light

உலக செய்திகள், பிப்ரவரி 21: பிரான்சின் தலைநகரான பாரிஸ், வாழ்க்கை தரத்தில் பின்தங்கி நிற்பதாக சமீபத்தில் வெளியான உலக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ”காதல் நகரம்” “விளக்குகளால் மிளிரும் நகரம்” என பல்வேறு பெயர்களில் போற்றப்பட்டாலும், வாழ்க்கை தரம் என்பதில் முன்னிலை வகிப்பதில்லை என சமீபத்தில் வெளியான உலக தரவரிசை பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகில் உள்ள 223 நகரங்களில் ”காதல் மற்றும் பிரகாசமான நகரம்” என்ற பட்டியலில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னா, சுவிசின் சூரிச் மற்றும் நியூசிலாந்தின் ஆக்லாந்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

தொடர்ந்து ஜெர்மனியின் மூனிச் 4ம் இடத்தையும், கனடாவின் வான்கூவர் 5ம் இடத்தையும், பாரிஸ் 27வது இடத்தையும் பிடித்துள்ளது.

லண்டன் 38வது இடத்தையும், ஸ்பெயினின் மாட்ரிட் 50வது இடத்தையும் மற்றும் இத்தாலியின் தலைநகர் ரோம் 51வது இடத்தையும் பிடித்திருப்பதால் இவை அனைத்தும் பிரான்சை காட்டிலும் பின்னணியில் இருப்பதாக பிரான்ஸ் மக்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

Loading