பிப்ரவ‌ரி 6 அ‌ஜித், கௌதம் படம் ஆரம்பம்

ajith

அ‌ஜித், கௌதம் வாசுதேவ மேனன் இணையும் படம் பிப்ரவ‌ரி 6 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

வீரம் படத்துக்குப் பிறகு கௌதம் இயக்கத்தில் நடிப்பதாக அ‌ஜித் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். அதன்படி வருகிற பிப்ரவ‌ரி 6 ஆம் தேதி இவர்கள் இணையும் புதிய படம் ஆரம்பமாகிறது.

இந்த பெய‌ரிடப்படாத படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயா‌ரிக்கிறார். இவர் அ‌ஜித்தின் ஆரம்பம் படத்தை தயா‌ரித்தது குறிப்பிடத்தக்கது.

ரத்னம் சாய்பாபா பக்தர். சாய்பாபா கோவில் ஒன்றை ஆரம்பம் படத்தின் போது கட்டியது நினைவிருக்கலாம்.

தனது அனைத்து நல்ல விஷயங்களையும் வியாழக்கிழமை தொடங்குவதுதான் ரத்னத்தின் வழக்கம். அது சாய்பாபாவுக்கு உகந்த நாள். மேலும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் என்ற தனது தயா‌ரிப்பு நிறுவனத்தின் பெயரையும் ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் என்று அவர் மாற்றியது முக்கியமானது.

ஆரம்பம் படத்தின் ஆடியோ மற்றும் பட வெளியீடு வியாழக்கிழமையே நடந்தது. அதேபோல் அ‌ஜித் – கௌதம் இணையும் படமும் பிப்ரவ‌ரி 6 ஆம் தேதி வியாழக்கிழமையே ஆரம்பமாகிறது. இந்தப் படத்தில் அ‌ஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

By True Tamil

ஜனவரி 23, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு