பிரதான எதிர்க்கட்சி இல்லாத பிரதமர் மோடி!?

 

 

modigi

மே 17, இந்தியாவே பரபரப்பாய் சுழன்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொடக்கம் முதலே எதிர்ப்பார் யாரும் இல்லாமல் பாரதிய ஜனதா முன்னிலை வகித்தது. சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் கட்சி துவண்டு தொங்கிப் போனதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலையில் 80 இடங்களை தனது மாநிலத்தில் வைத்திருக்கும் சமாஜ்வாடி கட்சியும் அதிக இடங்களை பிஜேபிக்கு கொடுத்து தோற்றுப் போனது. இந்த நிலையில் பிஜேபியை பாராளுமன்றத்தில் எதிர்க்க 55 இடங்களில் வெற்றி பெற்ற யாரும் இல்லை. இருப்பினும் யாரும் எதிர்பார்த்திராத வகையில் 37 இடங்களில் வெற்றி பெற்று 3வது பிரதான கட்சியாக பாராளுமன்றத்திற்குள் நுழைகிறது. இதன் விபரம் பின்வருமாறு:-

மொத்த இடங்கள் -543
பாரதிய ஜனதா கட்சி -283
காங்கிரஸ் – 47
அதிமுக – 37
திரிணாமுல் காங் – 34
பிஜூ ஜனதா தளம் – 20
சிவ சேனா – 17
தெலுங்கு தேசம் – 15
தெலுங்கானா ராஷ்டிர சமிதி – 11

இதர கட்சிகள் – 29

இப்படியாக மொத்தம் உள்ள பாராளுமன்ற தொகுதிகளை தங்களது செல்வாக்கினால் பங்கிட்டு கொண்டுள்ளன கட்சிகள். இதில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக யாரும் இல்லாத ஆட்சியை பிஜேபி அமைக்கிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு