புற்றுநோயை எதிர்க்கும் பொருட்டு மரபணு மாற்றப்பட்ட நாவல் நிற தக்காளி செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கனடாவின் ஒன்ராறியோவில் லியமிங்ரன் என்ற இடத்திலேயே இவ்வகையான தக்காளிகள் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நாவல் நிற தக்காளி செடிகள், உயர் அளவிலான அந்தோசயனின் அதாவது புளுபெரி, பிளாக்பெரி, பிளம்ஸ் போன்ற பழவகைகளில் காணப்படும் Anti Oxidant-டை விட அதிகமான அளவை கொண்டதாக உள்ளது.
அந்தோசயனின் புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை கொண்டது, சாதாரணமான தக்காளி செடியை போன்று இல்லாமல் நாவல் நிறத்தில் காணப்படுகிறது.
இச்செடிகள் கண்ணாடி வீட்டு சூழலில் வளர்க்கப்பட்டு, கைகளால் பறிக்கப்படுகின்றன.
இதன் சாற்றை எடுத்த பின்னர் விதைகளும், மரங்களும் பக்டீரியாவினால் ஏனைய பயிர்கள் மாசுபடுத்தப்படாமல் தடுப்பதற்காக எரிக்கப்படுகின்றன.
இப்பயிர்களிலிருந்து பெறப்படும் 2000 லிட்டர்கள் தக்காளி யூஸ், பிப்ரவரி மாத ஆரம்பத்தில் பிரித்தானிய இருதய நோயாளிகளுக்கு அனுப்பபட உள்ளது.
இத்தக்காளியில் நிறைந்துள்ள அந்தோசயனின்ஸ் இதய குழாய் நோய்களை எதிர்க்க வல்லது என்றும், அழற்கு எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ளது எனவும் மார்ட்டினின் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பருவகால பழமான புளுபெரிசின் விலையை விட இந்த தக்காளி சிறந்த தெரிவு என்றும் தெரிவித்துள்ளார்
![]()

