மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்க்கு பங்கு இல்லை – எல்.கே அத்வானி

Manmohan Singh led 'most corrupt' govt in free India

மார்ச் 13, மகாத்மா காந்தியின் கொலையில் ஆர்.எஸ்.எஸ்க்கு பங்கு  இல்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே அத்வானி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது “மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பே காரணம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி  தனது வலைதளத்தில் இது தொடர்பாக எழுதியுள்ளதாவது:-

ராஜ்மோகன் காந்தியின் புத்தகத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிப்ரவரி 27, 1948 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதம் குறித்து உள்ளது. கடிதத்தில் சர்தார் படேல் கூறியுள்ளதாவது:- காந்தி படுகொலை வழக்கு விசாரணையில் நான் தினமும் தொடர்பில் உள்ளேன். நான் மாலை நேரங்களில் சஞ்சீவுடன்(  உளவுத்துறை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் , தில்லி தலைவர்) பேசிவருகிறேன். அப்போது விசாரணையின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்.எல்லா குற்றவாளிகளும் தெளிவான நீண்ட விள்க்கங்களை அளித்துள்ளனர். இதில் ஆர்.எஸ்.எஸ்க்கு எந்த பங்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அத்வானி வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்வானி கூறும் போது, வரலாற்றை யாரும் பேசும்போது, காந்திஜி, இந்தியாவின் முதல் பிரதமராக நேருவுக்கு பதிலாக படேலைத்தான் விரும்பினார் என்பதை உணரமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு