மக்களவைத் தேர்தலில் தனித்துதான் போட்டி

mayawati

மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்துள்ளார்.

தனது பிறந்தநாளையொட்டி லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்ற பேரணி மற்றும்

பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மாயாவதி பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்புகள் உள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அது முற்றிலும் தவறானது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ கூட்டணி வைக்காது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா கலவரத்தை தடுக்கத் தவறிய அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியால், பல்வேறு மதங்களைப் பின்பற்றி வரும் மக்களிடம் எப்படி ஒற்றுமையை உருவாக்க முடியும்?

கோத்ரா சம்பவம் நாட்டையை உலுக்கிய நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தப்போவதாக நரேந்திர மோடி உறுதியளித்து வருகிறார். ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக பாஜக கூறி வருகிறது. ஆனால், குஜராத் மாநிலத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே லோக்ஆயுக்த அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் வலுவற்றதாக உள்ளது.

2003ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜகவும் சிபிஐயை தவறாக கையாண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டணி வைக்க என்னை நிர்பந்தித்தது.

வகுப்புவாத சத்கிகளுடன் நான் எந்த நேரத்திலும் கூட்டணி வைக்கமாட்டேன். இதற்காக வாழ்நாள் முழுவதும் சிறைச் செல்லவும் தயாராக உள்ளேன். பகுஜன் சமாஜ் கட்சிக்கு முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வாக்களித்தால் மத்தியில் பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்கலாம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான கொள்கைகளால் ஏழைகள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முசாஃபர்நகர் கலவரத்தையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் “குற்றப் பிரதேசமாக’ மாறியுள்ளது. ஊழல் மற்றும் வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்து வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மாயாவதி கூறினார்.

By True Tamil

ஜனவரி 16, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு