மத்திய அரசின் முதல் நிதியறிக்கை!- திருப்தி படுமா? திருத்தம் பெறுமா?

budget

ஜூலை10, இந்த இந்திய தேசம் ஒட்டு மொத்தமாய் பெரும்பான்மை ஒற்றுமையை வெளிக்கொணர்ந்தது நரேந்திரமோடி என்ற ஒற்றை வரியைத்தான். அந்த வரிக்குச் சொந்தக்காரரானவர் பொறுப்பேற்று முதல் மத்திய நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் சில பின் வருமாறு:

விவசாயிகள் பயனுள்ள தகவல்களை பெறும் விதமாக ரூ.100 கோடி முதலீட்டில் 24 மணி நேரம் ஒலிபரப்பாகும் புதிய வேளாண் தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

பல்வேறு வேளாண் பண்ணை மற்றும் விவசாயத்துறையைச் சார்ந்தவர்கள் உடனுக்குடன் பயனுள்ள தகவல்களை பெரும் விதமாக, இந்த வேளாண் தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது

தொழில் நிறுவனங்களுக்கு சலுகை:

ரூ.25 கோடி முதலீடு செய்து உற்பத்தி நிறுவனங்களை நிறுவுபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 15 % வரி விலக்கு அளிக்கப்படும் என்று அருண் ஜேட்லி தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

manmohan
பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து கூறியபோது, ரயில்வே பட்ஜெட்டை போலவே இந்த பட்ஜெட்டும் பயன் இல்லாத பட்ஜெட் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

By True Tamil

ஜூலை 10, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு