மனைவி பற்றி முதல் முறையாக தெரிவித்த நரேந்திர மோடி! – ஆச்சரி யப்படும் அரசியல் புள்ளிகள்!?

modi

 

வதோதரா:10.04.2014 வியாழன்.

வதோதரா தொகுதியில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்யும் போது வேட்பு மனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் யசோதாபென் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை அவர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் எல்லாம் மனைவியின் விபரத்தை குறிப்பிடாமல் வெற்றிடமாகவே விட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் தன் மனைவியின் விபரத்தை குறிப்பிடவில்லை. இந்நிலையில் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது திருமணம் தொடர்பான கட்டத்தை  பூர்த்தி செய்யவேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கோரியிருந்தார்.

இதையடுத்து நேற்று வதோதராவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது தனது மனைவியின் பெயர் யசோதாபென் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து திருமணம் தொடர்பான கட்டத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்று கோரியிருந்த கோவா மாநில காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் வாயடைத்துப் போனார். மேலும் தனது மனைவி பற்றிய தகவலை முதன் முறையாக மோடி தெரிவித்துள்ளதால் அவரை பிரம்மச்சாரி என்று நினைத்த பல கட்சி தலைவர்களுக்கும் இது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு