மலேசிய ஓபன்: சாய்னா, சிந்து வெற்றி

saina-sindhu

மலேசிய சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து வெற்றி பெற்றனர்.

கோலாலம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மகளிருக்கான முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சாய்னா, இந்தோனேசியாவின் ஹெரா டேஸியை சந்தித்தார். 36 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் சாய்னா 21-10, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாய்னா 2-வது சுற்றில் சீனாவின் யாவ் ஜியுவை சந்திக்க உள்ளார். கடந்த ஆண்டு ஃபார்மின்றித் தவித்த சாய்னா இந்த ஆண்டு வெற்றியுடன் தொடங்கி இருப்பது ஆறுதல்.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் சிந்து, இந்தோனேஷியாவின் லிண்டாவெனி ஃபனட்ரியுடன் மோதினார். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள சிந்து 2-வது சுற்றில் கொரியாவின் இயான் ஜு பேவை சந்திக்கிறார்.

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் குருசாய்தத் மற்றும் ஆனந்த் பவார் இருவரும் தோல்வியடைந்தனர்.

By True Tamil

ஜனவரி 16, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு