மாயமான மலேசிய விமானம் MH 370 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது!? ரஷ்ய உளவு துறையின் அதிரடி தகவலால் அதிர்ச்சி!?

மலேசியா:11.04.2014 வெள்ளி

mh370
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகருக்கு mh370 விமானம் 239 பேருடன் சென்றது. இந்நிலையில் பயணித்த ஒரு மணிநேரத்தில் விமானத்தின் தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து காணாமல் போன விமானத்தை தேடி பல்வேறு நாட்டு விமானபடை விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடிவந்தன. விமானம் எங்கும் கிடைக்காததால் யாராவது விமானத்தை கடத்தி வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதனைதொடர்ந்து தீவிர தேடலில் அப்படி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. இவ்வாறு கடந்த மாதம் முழுவதும் தேடியும் விமானம் கிடைக்காத நிலையில், விமானம் கடலில் விழுந்துருக்கும் என்றும், அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாகவும், அங்கு விமானம் முற்றிலும் பிரிக்கப்பட்டு, அதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில் 7 குழுக்களாக பிரிக்கப் பட்டுள்ளதாகவும்
மேலும் அந்த விமானத்தில் பயணித்த விஐபிகள் 20 பேரை ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் பிணைக் கைதிகளாக பயங்கரவாதிகள் அடைத்துவைத்துள்ளனர் என்று ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு