முதல்முறையாக நடனமாடாமல் நடித்திருக்கும் பிரபுதேவா!

முதல்முறையாக நடனமாடாமல் நடித்திருக்கும் பிரபுதேவா!

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மெர்குரி. இத் திரைப்படத்தில் பிரபுதேவா நடனமாடாமல் நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

பீசா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி போன்ற வித்தியாசமான படைப்புகளை உருவாக்கி, தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக உருவேடுத்திருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இப்போது நடிகர் பிரபுதேவாவை வைத்து ‘மெர்குரி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வித்தியாசமான முயற்சியாக படம் முழுவதும் மௌனமாக இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து ‘மெர்குரி’ என்ற பாடல் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில், குறிப்பாக பிரபுதேவாவின் நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

ஆனால், அந்தப் பாடல் படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே என படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் அந்தப் பாடல் இடம்பெறாது எனவும், படத்தில் பிரபுதேவா நடனமாடும் காட்சிகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குகிறார் இதனை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு