முதல்வர் ‘ஜெ’ ஊழல்வாதியா? இல்லையா? தீர்ப்பை பார்க்கவும்!

je-@-sasi

முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்க்க வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், சசிகலா ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

காலை தொடங்கிய இறுதி வாதங்கள் மாலையில் முடிந்த நிலையில், வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.

அன்றைய தினம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். 17 ஆண்டுகால வழக்கு 17 ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளதால் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் திக் திக் மனநிலையில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு