மோடி சுதந்திர தின உரை! சாதியவாதம், மதவாதத்தை ஏற்க கூடாது!

modi-ame

நாட்டில் சாதியவாதம் மதவாதம் ஆகியவற்றை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டைக்கு  வருகை தந்த பிரதமர் மோடி  வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

 

ஆகஸ்ட் மாதம் 15 ஆம்  தேதி சுதந்திரத்தின் விடியல். 125 கோடி மக்களுக்கான கனவு மற்றும் நம்பிக்கைக்கான  நேரம் இது. வீரம் மிக்க சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன். இளைஞர்கள் பெண்கள் என தலைநமிர வைத்த தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் . நமது நோக்கம் நல்ல ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும். நாட்டின் ஒற்றுமை குலைந்தால் மக்களின் கனவும் சீரழிந்து விடும். இந்தியாவின் சுதந்திரத்தை தியாகம் செய்த அனைவருக்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

இந்தியாவின் வலிமையும், ஒற்றுமையும், பாதிக்கப்பட்டு விடக்கூடாது. ஒராண்டுகளில் நாடு முழுவதும் பள்ளிகளில்  4.25 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியான காப்பீடு ஓய்வூதிய  திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். சிறுவர்களே தூய்மை இந்தியா திட்டத்தின் சிறந்த தூதுவர்களாக இருந்தனர். தொழிலாளர்களின் கௌரவத்தைக்  காப்பது நமது நாட்டின் கடமை.

அரசின் அனைத்துத்  திட்டங்களும் ஏழைகளுக்கான திட்டமாகவே இருக்கும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும். ஜன் தன் திட்டத்தின் கீழ் 17 கோடி வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க மேல் மட்டத்தில் இருந்து நடவடிக்கைகள் தேவை. சாதியவாதம், மதவாதம் ஆகியவற்றை  எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடாது. எல்.பி.ஜி மானியம் என்ற பெயரில் ஆண்டுதோறும் வீணான 15 ஆயிரம் கோடி தடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.  மானியத்தை விட்டுக் கொடுக்க இயன்றவர்கள் முன் வர வேண்டும்.

நமது இலக்கை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது. பொருளாதாரம்  வலுவாக இருந்தால்தால்தான் வளர்ச்சி மூலம்  ஏழைகளை மேம்படுத்த முடியும். ஊழலை ஒழிக்க உயர் மட்டத்தில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்க முடியும். மக்களின் ஒத்துழைப்பால் தூய்மை இந்தியா திட்டம் சாத்தியமாகியுள்ளது. அனைத்து அரசுகளும் திட்டங்களைத் தீட்டினாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா  என்பது கேள்விதான். ஏழைகளுக்கு திறக்காத வங்கி கணக்குகளைத்  திறந்து விடுவதே எங்கள் நோக்கம்.  நமது எண்ணம் செயல் அனைத்தையும் ஏழ்மையை ஒழிப்பதில் செலவிட வேண்டும்.

இந்திய தேசிய கொடியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். கடந்த ஓராண்டில் ஒரு சிறிய அளவிலான ஊழல் கூட நடைபெறவில்லை. ஜி 20 மாநாட்டில் கருப்பு பணத்தை மீட்க சர்வதேச உதவியை நாடினேன். கருப்புப்  பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

By True Tamil

ஆகஸ்ட் 15, 2015
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு