ரஜினி பிறந்த நாள்: ‘காலா’ படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு!

ரஜினி பிறந்த நாள்: 'காலா' படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு!

வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், கபாலி படத்திற்கு பிறகு, இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதியான இன்று வெளியிடப்படும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் இரண்டாவது போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் வெளியிட்டார்.

‘காலா’ படத்தின் இரண்டாவது போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் படம் ஆகஸ்டு 2018ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி பிறந்த நாள்: 'காலா' படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு!#HBDSuperStarRajinikanth #Kaala #Superstar #Rajinikanth #HBDThalaivaa #Thalaiva #HBDRajinikanth

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு