ரயில்வே பட்ஜெட்: மகிழ்ச்சியில் மோடியும் கண்டனத்தில் காங்கிரசும்!

modi

ஜூலை 8, ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்துள்ளது அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ள ஒரு நவீன பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில்கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த பட்ஜெட் ரயில் பயணத்தை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் புல்லட் ரயில் உட்பட அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள், தனியார் நிறுவங்களின் வளர்ச்சிக்காகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் புது தில்லியில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா வீடு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராகவும், சதானந்த கவுடாவிற்கு எதிராகவும் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முகேஷ் சர்மா கூறுகையில், புல்லட் ரயில் உட்பட பல்வேறு ரயில் திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சாதமாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றார். இந்நிலையில் முகேஷ் சர்மா, சாதானந்த கவுடாவின் பெயர் பலகையை சுவற்றில் இருந்து நீக்கி காலில் போட்டு மிதித்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு