ஜூலை 15, சென்னை ராயபுரத்தில் 3வது ரயில் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உறுதி அளித்துள்ளார்.
சென்னையின் ஆரம்ப கால கட்டத்தில் தற்போது மூடிய நிலையில் இருக்கும் ராயபுரம் ரயில்நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆனால் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து வரும் மக்கள் சென்னையின் தென்பகுதியில் அதிகம் வசிப்பதால் போக்குவரத்து வசதி காரணமாக மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை மக்களின் நீண்ட நாள் கனவும் கோரிக்கையும் ராயபுரம் ரயில் நிலையம் மீண்டும் இயங்க வேண்டும் என்பதுதான். இது இப்போது நிறைவேறப்போகிறது.
மேலும் கன்னியாகுமரியில் ரயில் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பபடும் என்றார். ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டையும் மறுத்துள்ள அவர், ரயில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 1,233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது விளக்கமளித்துள்ளார்.
![]()

