விஜய் அவார்ட்ஸ் விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

sivakarthi

ஜூலை 20, வருடாவருடம் மிகவும் சிறப்பு வாய்ந்த திரைத் துறைச் சார்ந்த சாதனைகளுக்கு விஜய் தொலைக்காட்சி வழங்கும் விஜய் அவார்ட்ஸ் விழா இன்று ஒளிபரப்பானது.

அதில் சில சுவாரஸ்ய நிகழ்வுகள்:

சிறந்த ஜூரி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விஜய் சேதுபதிக்கு இவ்விருது வழங்கப்பட்டது. நீங்கள் கடத்த விரும்பும் கதாநாயகி யாரென்று கேட்டதற்கு ப்ப்பா……! செம்ம அழகுடா…! என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அப்போது அரங்கம் அதிர்ந்தது கூடவே ஆனந்தத்தில் அழகுதேவதை நயன்தாராவும்!

nayan
இயக்குனர் ராம் தங்கமீன்கள் படத்திற்கான சிறந்த விருதை வாங்கும் போது தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் சாதனா-விற்கு விருது வழங்கப்படவில்லை என்பதை ஆதங்கத்துடன் தெரிவித்தார். பிறகு அப்படத்தில் வந்த ‘ஆனந்த யாழை’ பாடலை பாடக் கோரி வேண்டிகொண்டார். ஒருவழியாக ஆதங்கமும், சமாளிப்புமாக விருதை இசையமைப்பாளர் யுவன்னுக்கு அளித்து கீழிறங்கினார்.

ram

எங்கள் வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன்…. என்று டிடி-யும், கோபியும் அழைத்தனர். மேடையேறி இவ்வருடத்தின் சிறந்த எண்டர்டெய்னர் விருது வழங்கப்பட்டது. அப்போது தனது தந்தையை மிஸ் பண்ணுவதாக தெரிவித்தார். மேலும் தான் தனது தந்தைக்கு கொல்லி வைத்ததை தவிர எதுவுமே செய்ததில்லை இவ்விருது தனது தந்தையின் படத்துக்கு அருகில் வைத்துக்கொள்ளப் போவதாக கூறி கண்கலகினார். அரங்கமும் சேர்ந்து கண்கலங்கியது. மிகப் பெரிய வெற்றி பெறுவாய் என வாழ்த்துச்சொல்லி அனுப்பிவைத்தனர்.

bharathiraja

தான் அறிமுகம் செய்த நடிகை சுகாசினியிடமிருந்து சிறந்த இணை நடிகருக்கான விருதை இயக்குனர் பாரதிராஜா பெற்ற போது விருதை வழங்குவதில் கௌரவப் படுவதாக சுகாசினி தெரிவித்தார். மேலும் இயக்குனர், தன்னை முதன்முதலில் சிறந்த நடிகன் என்று அங்கீகரித்த நடிகர் திலகத்திற்கு விருதை சமர்ப்பிபதாக கூறி நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு