‘ஸ்டார்’ மற்றும் ‘ரட்சகன்’ படங்களை இயக்கிய பிரவீன்காந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதோடு இசையமைப்பாளரும் அவரே. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் எஸ்.மதன்தான் இதில் பிரபாகரனாக நடித்துள்ளார். பாலசந்திரனாக 9ம் வகுப்பு மாணவன் சத்யா வருகிறார். இந்தப் படத்தில் இயக்குனர் பிரவீன்காந்தும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
இப்படம் குறித்து பிரவீன்காந்த் கூறியதாவது, “ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அவனுடைய மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்று பதிவாய் எடுத்திருக்கிறோம். பாலச்சந்திரன் சுட்டுக் கொல்வதற்குமுன் இலங்கை ராணுவத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சேனல் 4 நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது அந்த பாலகனுடைய பார்வை அனைவரையும் உலுக்கியது. அந்த பார்வையை பதிவு செய்யும் விதமாய் படத்திற்கு ‘புலிப்பார்வை’ என பெயர் வைத்துள்ளோம் என்றார். இந்த கதையை படமாக எடுப்பதற்கு முன் அதை சென்சார் அதிகாரிகளிடம் சொல்லி முறையான அனுமதி வாங்கியே எடுத்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.மதன் இப்படத்தை தயாரித்து, வெளியிடுகிறார்.
![]()

