Veeran Muthu Raku - Tamil Movie Reviews

மார்ச் 23:வீரம் நிறைந்த வார்த்தைகள் கூட நம் உடலுக்குள் திடீரென்று புதிய சக்தியை கொடுக்கும். அப்படி தைரியம் நிறைந்த கதைகளை சொல்லித்தான் நமது குழந்தை மற்றும் இளமை பருவங்களில் வளர்க்கப்பட்டோம்.

இப்படி வீரம் நிறைந்த, நாம் கேட்டு வளர்ந்த கதைகளை திரையில் மெருகூட்டலுடன் காண்பிக்கும் போது ரசிக்காமல் இருக்க முடியுமா?

அப்படி வீரம் நிறைந்த நிறைய கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்திருகின்றன. அந்த வரிசையில் தற்போதைய வெற்றி வரவாக வீரம் குறையாமல் இருக்க வெளிவந்து ஓடிகொண்டிருக்கும் படம்தான் “வீரன் முத்துராக்கு” .

கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்க, எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர் நாயகனாக பொருந்த, வீரனுக்கு சமமாக ஈடுகொடுத்து நாயகியாக லியாஸ்ரீ நடித்திருக்கிறார். பேராண்மை, ஏதோ செய்தாய் என்னை படங்களுக்குப் பிறகு இது மூன்றாவது படம். சண்முகராஜன், ஆடுகளம் நரேன், நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடித்திருக்க “முத்துராக்கு” எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறது.

மதுரை பொண்ணு சென்னை பையன் படத்தின் இயக்குனர் ராஜசேகரனின் இயக்கத்தில், தங்கர் பச்சானின் உதவி ஒளிப்பதிவாளர் பாஸ்கரின் காமிரா கண்களுக்குள் புகுந்து கோபாலகிருஷ்ணனின் இசையில் அழகான படைப்பாக வெளிக் கொண்டுவந்திருக்கிறது தயாரிப்புக்குழு. வீரம் குறையாத, ஊர்வாசம் மாறாது வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் “வீரன் முத்துராக்கு” இளையவர்களுக்கு ராக்…ராக்…ராக்கிங் ராக். படத்தின் வெள்ளிவிழாவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்
இராஜ தேவேந்திரன்

Movie Details
Producer: K. Shunmugam
Executive Producer: A , Nazeer Ahamed
Director:C. Rajasekaran
Music Director: S V Gopalakrishnan
Cameraman: S . Baskar
Hero : Veluthukattu Kathir
Heroine : Lia Sri
Other Artistee :Shanmugaraj, Naren, Namo Narayanan, Vikash

veeran-muthuraku-postersveeran-muthuraku-posters1 veeran-muthuraku-posters2

Loading