வேட்டியை மறுத்தால் க்ளப்புகளுக்குத் தடை!- முதல்வர் ஜெ. உத்தரவு !

jeya-thoti

ஜூலை18, தமிழர் உடையான வேட்டியை அணிந்து கிரிக்கெட் சங்கத்துக்கு சென்ற நீதிபதிகளை வேட்டி அணிந்து வரக்கூடாது என சங்கத்தினர் தடைசெய்தனர். இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்புமாறு தமிழக அரசின் சங்கங்கள் பதிவாளருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழர் உடையான வேட்டி அணிந்து வருவதற்குத் தடை விதிக்கும் இதுபோன்ற நடைமுறை சென்னையில் உள்ள சில மன்றங்களில் உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் உரிய சட்ட மசோதா நிகழ் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.

அதன் அடிப்படையில், தமிழர் கலாசாரத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் மன்றங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தேமுதிக, திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக வரவேற்பு தெரிவித்தன.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு