வேலையிழக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

microsoft-na
மைக்ரோசாப்டில் பணியாற்றும் சுமார் 18,000 ஊழியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 39 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நடவடிக்கையால், மைக்ரோசாப்ட்டால் வாங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்தின் 12,500 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தற்போது 1.27 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளவர்கள் எண்ணிக்கை 14 சதவீதமாக இருக்கும் என்று தெரிகிறது.

இதன் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்த்து உலகெங்கும்  இருக்கும் நிறுவனங்களில் எடுக்கும் திடீர் முடிவுகள் எந்த விதமான பாதிப்பையும் ஈற்படுதாலம் என சார்பு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு