umman-chandi

 

மே1,கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தெரிந்தும், கேரள மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த 418 மது அருந்தும் விடுதிகளின் (பார்) உரிமத்தை ஒரு மாதம் முன்பு ரத்து செய்தது உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

முதல்வர் உம்மன் சாண்டியின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும், மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக 418 மது அருந்தும் விடுதிகள் செயல்படாமல் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்கூட, முதல்வரின் நோக்கத்தைப் பாராட்டவே செய்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

“பூரண மதுவிலக்குதான் இலக்கு என்றாலும், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை. அதற்காக, மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்தவும், மதுப் பழக்கத்தை மெல்ல மெல்ல குறைப்பதற்கும் இப்போது முதலே நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினால்தான், பத்து ஆண்டுகளுக்குப் பிறகாவது சமுதாயம் மது போதையிலிருந்து விடுபடும்’ என்கிற முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்தில் யார்தான் குறை காண முடியும்?

கேரள மாநிலத்தின் நிதி வருவாயில் மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வரி வருமானம் கணிசமாக ரூ.8,000 கோடி மது விற்பனையிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது. இந்த வருமான இழப்பை எப்படி அரசு ஈடுகட்டுவது என்று முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களில் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி.எம். சுதீரனே முன்னணியில் இருக்கிறார் என்பதுதான் பிரச்னையின் தீவிரத்தை அதிகமாக்குகிறது.

418 மது அருந்தும் விடுதிகளின் உரிமத்தை, மாநில அரசு ஒரு மாதம் முன்பு ரத்து செய்ததைத் தொடர்ந்து அவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகிறார்கள். இந்தப் பிரச்னையில் தலையிட முடியாது என்று கூறி இடைக்காலத் தடை வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது முதல்வர் உம்மன் சாண்டிக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆறுதல்.

தந்தை பெரியார் அவர்கள் கள் குடிப்பதால் மக்கள் தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாகி குடும்பங்களுக்கு தீங்கு செய்து வாழ்வை இழக்கின்றனர் எனக் கருதிய உடனேயே தனக்கு சொந்தமான 2000 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார் என்பது ஊரறிந்த உண்மை. இதனாலேயே இவருக்கு வைக்கம் வீரர் என பட்டம் சூட்டி அழகு பார்த்தனர் அன்றை பெரியவர்கள்.

பெரியாரின் சீடர் என்று சொல்லும் கலைஞருக்கு இது தெரிவில்லை போலும்! திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் ர.ர- க்களுக்கும் இது தெரியாது என்பது தானே உண்மை!

தமிழகத்திலும் இது போன்றே வருவாய் இழப்பு ஏற்படும் என கூறி தமிழகத்தை ஆண்ட, ஆளுகின்ற இரு திராவிட கட்சிகளும் மக்களை ஏமாற்றி மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களே! தமிழர்களே! என்று உரக்க கத்தும் அய்யாவுக்கும், ரத்தத்தின் ரத்தங்களே! என்று கூறும் அம்மாவுக்கும் இது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்பது தெரியாதா? பாமரனே பலி ஆடு! பாரதமே நமது வீடு என்று வாரிச்சுருட்டும் இவர்களுக்கு எப்போது இது புரியுமோ? தள்ளாடும் தமிழன் நிலை மாறுமோ?

Loading