ஹன்சிகாவின் காதல்?

hansika
சிம்புவுடனான தற்போதைய காதல் நிலைமை குறித்து கூறியுள்ளார் ஹன்சிகா மோத்வானி.
சிம்புவும், ஹன்சிகாவும் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டு வாலு படத்தில் நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம் நீ தான் என் டார்லிங் என்று ஹன்சிகாவை பார்த்து சிம்பு பாடுவது போல் பாடல் காட்சியொன்றும் இடம் பெறுகிறது.
ஆனால் சிம்பு, ஹன்சிகா இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.
பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவும் பிரிவுக்கு காரணம் என்கின்றனர்.
இந்நிலையில் சிம்புவுடன் காதல் முறிந்து விட்டதா என்று ஹன்சிகாவிடம் கேட்டபோது, நேரம் வரும் போது இதுபற்றி அறிவிப்பேன் இப்போது நான் அமைதியாக இருக்கிறேன் என்றும் வேறு எது பற்றியும் பேச விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

By True Tamil

ஜனவரி 25, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு