46 மீனவர்களுக்கு இலங்கையில் சிறை!

sri-navy

ஜூன் 22, இலங்கை இனவாத அரசு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19ஆம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் 46 மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.

பின்னர் மன்னார் மற்றும் திரிகோணமலை ஆகியவற்றில்
உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் அவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 22 மீனவர்களை இம்மாதம் 27ஆம் தேதி வரையிலும், 24 பேரை அடுத்த மாதம் 2ஆம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து 46 மீனவர்களும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், இலங்கை கடற்படையால் கடந்த 7ஆம் தேதி கைது செய்யப்பட்ட 82 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் அதிபர் மகிந்தா ராஜபக்சே உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு