எங்கள் ஆதரவின்றி யாரும்  ஆட்சி அமைக்க முடியாது கார்த்திக்!

பிப்ரவரி 25: தேசிய கட்சி உள்பட 3 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவதாகவும் நடிகர் கார்த்திக் கூறினார்.

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டில் நாங்கள் தனித்து போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது என்பது தெரியும். எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது.

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம். 2 மாநில கட்சிகள் மற்றும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, எங்களுக்கு 3 சீட் ஒதுக்கும் கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். எந்த கட்சியோடு கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்பேன். தேர்தலில் சீட் கொடுக்காமல் ஆதரவு மட்டும் கேட்டால் கொடுக்க மாட்டோம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் தனியாக போட்டியிடுவோம்.

தேனி பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. மக்களுக்கு நான் என்ன செய்வேன் என்பதை தேர்தலின்போது அறிவிப்பேன்.

Loading