பிபாஷா பாசுவுக்கு மற்றொரு காதலருடன் திருமணம் !?

bipasha

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தனது காதலரை விரைவில் மணமுடிக்க இருக்கிறார். 

நடிகர் ஜான் ஆப்ரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் எட்டு வருடங்களாக காதலித்து வந்தனர். யார் எந்த குண்டைத் தூக்கி போட்டார்களோ தெரியவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துச் சென்றனர். இந்நிலையில் கடந்த புத்தாண்டு அன்று ஆப்ரகாம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் என்ற இடத்தில் தனது தோழியும், புதுகாதலியுமான பிரியா ருஞ்சாலை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து பிபாஷாபாசு பழைய காதல் முறிவுக்குப் பிறகு விரும்பிய காதலர் ஹர்மன் பவேஜாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஹர்மன் தற்போது ஷில்பா ஷெட்டி தயாரிக்கும் ’திஷ்கியான்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருக்கிறது. இந்த படம் வெளியானதும் இருவரும் சேர்ந்து தங்களது திருமண தேதியை முடிவு செய்து அறிவிக்க உள்ளனர். இந்த தகவலை நடிகை பிபாஷா பாசுவே தெரிவித்துள்ளார்.

“காதலில் உறுதியாக இருந்தால் தாலி தேவை இல்லை”

By True Tamil

டிசம்பர் 21, 2013
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு