ஆண் குழந்தைக்கு அம்மாவான நடிகை பூமிகா !

Actor Bhoomika

மார்ச் 03: நடிகை பூமிகா தமிழில் ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘ரோஜா கூட்டம்’ படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007–ல் திருமணம் நடந்தது.  பல வருடங்களுக்கு பிறகு இப்போது பூமிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பூமிகாவும் உறுதி செய்தார்.

இதுகுறித்து பூமிகா கூறும்போது, ‘‘எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். ஆனந்தபெருக்கால் விழிகளில் கண்ணீர் வந்தது’’ என்றார்.

குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும்படி நடிகர், நடிகைக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு