அப்ரிடியின் அதிரடியில் ஆடிப்போன பங்களாதேஷ்!

 Sensational Afridi seals final berth

மார்ச்04: இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்தெடுத்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

அனமவுல் ,இம்ருல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கத்தை கொடுத்தனர். இந்நிலையில் 59 ரன்கள் எடுத்த இம்ருல் காயெஸ் 59 ரன்களில் அவுட் ஆனார் , இதனை தொடர்ந்து வந்த மொமினுஸ் கக்யூ 51 ரன்களும், எடுத்து அவுட் ஆனார்.

இதனை தொடந்து வந்த முஸபிகுர் ரகீம் அதிரடியாக ஆடியதால் வங்கதேசம் 300 ரன்களை கடந்து சாதனை படைத்தது. வங்க தேச அணி 50 ஓவர் முடிவில் 3விக்கெட இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அப்ரிடியின் அதிரடியில் வெற்றி பெற்றது. அஹ்மத் ஷேஹ்சாத் 103 ரன்களும் பாவத் அலம் 74 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

அப்ரிடி 27 பந்துக்களில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் உட்பட 59 ரன்கள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு