ரஜினியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!

Anushka to pair with Rajini

மார்ச்05 : ரஜினி நடித்துள்ள கோச்டையான் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுளாராம். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் அதிக பொருட்செலவில் உருவாகும் படங்களில் அனுஷ்காதான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இரண்டாம் உலகம் படத்தை அடுத்து பாஹுபலி, ராணி ருத்ரமம்மா தேவி என 2 டோலிவுட் பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படம் தமிழிலும் உருவாகிறது. ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் இப்படங்களில் நடித்து வருவதால் கடந்த 1 ஒரு வருடமாக புதிய படங்கள் எதையும் அனுஷ்கா ஒப்புக்கொள்ளவில்லை.

ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் ரஜினியின் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவரிடம் ரவிகுமார் பேசி வருகிறார் என கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு