மார்ச் 08: மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு 239 பேருடன் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது.
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர்.
6.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டிய விமானம், தீடிரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளின் நிலை குறித்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமானத்தை தேடும்பணியி்ல் சர்வதேச விமான ஆணையமும் ஈடுபட்டு்ள்ளது.
விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம் என்று மலேசிய ஏர்லைன்ஸ் தலமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
![]()

