மனம் திறந்த ராகுல் – பிரதமர் பதவிக்கு நான் தயார்

rahulgandhi

“காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் ஒரு காங்கிரஸ் சிப்பாய், காங்கிரஸ் கட்சியின் உத்தரவுகளுக்கு எப்போதுமே கீழ்படிந்து நடப்பேன்” என பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டெல்லியில் வரும் 17-ம் தேதி கூடுகிறது. இதில், பிரியங்காவை தேர்தல் பிரச்சாரத் தில் ஈடுபடுத்துவது, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில், டைனிக் பாஸ்கர் என்ற இந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அவர் முன் நிறுத்தப்படுவது குறித்து விரிவாக பேட்டி அளித்துள்ளார்.

அதில்: “கட்சி உத்தரவுகளுக்கு கீழ் படிவேன். இது வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் நான் என்ன மாதிரியான பொறுப்புகளை ஏற்க வேண்டும் என பணித்ததோ அவற்றை ஏற்ற சிறப்பாகவே பணியாற்றியுள்ளேன். எந்த முடிவாக இருந்தாலும் அதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என தெரிவித்துள்ளார்.

By True Tamil

டிசம்பர் 21, 2013
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு