KV-Thangabalu

மார்ச் 13,  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மட்டும் செய்ய கே.வி.தங்கபாலு முடிவு செய்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவதற்காக சேலம் உள்ளிட்ட எந்த தொகுதிக்கும் கே.வி.தங்கபாலு விருப்ப மனு அளிக்கவில்லை. மூன்று மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

ஏற்கனவே, 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். மேலும், உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும், வரும் சட்ட மன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து தேர்வு குழு தலைவர் குலாம் நபி ஆசாத், பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் போன்றோரிடம் தனது நிலைப்பட்டை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து ஒருவரே தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக புதியவர்கள் போட்டியிட்டால், தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். வேட்பாளர்களாக அந்தந்த தொகுதியில் நியமனம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை தலைமையிடம் தெரிவித்திருந்த அவர், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

Loading