மீண்டும் தமிழ் சினிமாவில் மதுபாலா!

madubala

மார்ச் 15,’அழகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. தொடர்ந்து ரோஜா, வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தற்போது இரண்டு குழந்தைக்கு தாயாக உள்ள மதுபாலா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது தமிழில், ”வாயைமூடி பேசவும்” என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அதில் பங்கேற்ற மதுபாலா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி, நான் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன். ஆனால் தமிழில், ரசிகர்கள் கொடுத்த மரியாதை என்றும் மறக்க முடியாது. ரொம்ப நாள் கழித்து மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறேன். வாயை மூடி பேசவும் படத்தில் எனது ரோல் ரொம்ப பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். இப்போது நிறைய புதுமுகங்கள் வித்தியாசமான கதைகளத்துடன் சாதிக்கிறார்கள். நானும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன். மீண்டும் நிறைய தமிழ் படங்கள் பண்ண ஆசை, நல்ல கதைகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு