களைகட்டிய கோல்டன் குளோப் விருதுகள் 2014

golden-globe-awards

ஒஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள்.

2013ம் ஆண்டுக்கான 71வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதுவரை ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ, இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான விருதினைத் தட்டிச் சென்றார்.

கொமடி மியூசிக்கல் வகையில் சிறந்த திரைப்படமாக அமெரிக்கன் ஹஸல் திரைப்படமும், டிராமா வகையில் சிறந்த படமாக 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறந்த இயக்குநருக்கான விருதை, உலகம் முழுவது வெற்றிகரமாக ஓடி, விமர்சகர்கள் பாராட்டையும் பெற்ற கிராவிட்டி படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ காரன் பெற்றர்.

கடந்தாண்டு கோல்டன் குளோபில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற ஜெனிஃபர் லாரன்ஸ், இந்த முறை சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.

By True Tamil

ஜனவரி 14, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு