உலகையே உறைய வைக்கும் தீர்ப்பு – 529 பேருக்கு ஒரே வழக்கில் மரண தண்டனை!.

Egypt

மார்ச் 25, எகிப்து நாட்டில் முகமது மொர்சியின் பதவி ராணுவத்தால் பறிக்கப்பட்டது. இதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின்போது தலைநகர் கெய்ரோவில் வன்முறை வெடித்ததில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் காவல்துறையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

கலவரம் ஏற்படுத்தியது தொடர்பாக 545 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. எகிப்தின் மின்யா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மட்டும் விடுவிக்கப்படுவதாக அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரே வழக்கில் 529 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உலகையே உலுக்க செய்யும் வகையிலான தீர்ப்பாக இருக்கிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு