ஹரி இயக்கத்தில் மீண்டும் விஷால் !

Vishal-Hari-flick

மார்ச் 28, சிங்கம் 2 வுக்குப் பிறகு ஹரி இயக்கும் படத்தில் விஷால், ஸ்ருதி நடிக்கிறார்கள். இதனை ஸ்ருதியும் உறுதி செய்தார். ஹரியின் அதிவேக ஆக்ஷன் படங்களுக்கு முதிர்ந்த சீனியர் நடிகர்கள்தான் செட்டாகிறார்கள்.

விக்ரம், சூர்யா, விஷால் போன்றவர்கள். பரத், சிம்பு, தனுஷ் என்று இளம் ஜுனியர்களுடன் கூட்டணி சேரும் போது சேவல், கோவில், வேங்கை என தோல்விதான் பரிசாகிறது.

இதனை நன்கு உணர்ந்தவர் சிங்கம் 2 வுக்குப் பிறகு விஷாலை இயக்குகிறார்.

இதில் விஷாலுடன் நடிப்பவர் ஸ்ருதிஹாசன். 3, 7 ஆம் அறிவு என்ற ஸ்ருதியின் தோல்விப் பயணத்துக்கு ஹரியின் படம் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகிறது.

இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரியாகிறார் நடிகை கௌசல்யா. விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் நாளடைவில் விஜய் படத்திலேயே (திருமலை) குணச்சித்திர நடிகையாக பரிமாணமடைந்தார். இவர் கடைசியாக நடித்தப் படம் சந்தோஷ் சுப்பிரமணியம்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் தனது உடம்பை குறைத்து ஹரி படத்தில் ரீஎன்ட்ரியாகிறார். ஸ்ருதியைப் போலவே தமிழில் தனக்கு இது திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கௌசல்யா.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு