திரைப்படமாகிரது ரஜினியின் வாழ்க்கை வரலாறு!

Kochadiyan audio

ஏப்ரல் 02, பாலிவுட்டில் சில சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் பைசல் சைப். இவர் தற்போது ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் எடுக்க உள்ளார்.

தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்ற பெயரில் உருவாக உள்ளதாம்.
ரஜினி தனது வாழ்க்கையை பஸ் கண்டக்டராக தொடங்கியது முதல் சினிமாவில் சாதித்து ஆன்மீகத்தில் ஈடுபட்டது வரை அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த படம் தயாராகிறது.

இப்படத்தில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் என்பவர் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் இவர், தமிழில் பில்லா, சிங்கம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த வாய்ப்பினை பற்றி ஆதித்யா மேனன் கூறுகையில், ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன் என்றார். படக்குழுவினர் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு