சூர்யா – லிங்குசாமி படத்தின் தலைப்பு ‘அஞ்சான்’

surya

சிங்கம் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, இயக்குநர் லிங்குசாமியுடன் கைகோர்த்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில், அவருடைய சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் யுடிவி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அத்துடன், இப்படத்தின் நாயகி சமந்தாவுக்கு சரும நோய் ஏற்பட, கதாநாயகி விஷயத்திலும் பிரச்சனை ஏற்பட, இப்படத்தின் நாயகி சமந்தா தான் அதில் எந்த வித மாற்றமும் இல்லை, அதேபோல படத்தின் தலைப்பும் விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குநர் லிங்குசாமி விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில், சூர்யா – லிங்குசாமி கூட்டணி படத்திற்கு ‘அஞ்சான்’ என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்று இதை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

படத்தின் கதையைக் காட்டிலும் தலைப்பு வைப்பதில் தடுமாறி வந்த இயக்குநர் லிங்குசாமி, தற்போது ‘அஞ்சான்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார். இந்த தலைப்பை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார்கள்.

மிக பிரம்மாண்ட பொருட்ச்செலவில் உருவாகி வரும் ‘அஞ்சான்’ தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

By True Tamil

ஜனவரி 16, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு