ரஜினியுடன் ஜோடி சேரும் சோனாக்‌ஷி சின்கா!

rajini-sonakshi

ஏப்ரல் 09, மும்பை: ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் இணையதளங்களில் கலக்கி வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும் அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ரஜினியுடன் நடிக்கும் படத்தினால் தனது தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவதாக, இந்தி திரையுலகின் முன்னணி நடிகை சோனாக்‌ஷி சின்கா கூறியுள்ளார்.

இது தொடர்பாக சோனாக்‌ஷி சின்கா அளித்துள்ள பேட்டியில் “ஒரு வழியாக தென்னிந்திய மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். எனது முதல் படமே சிறந்த படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரஜினி சாருக்கு ஜோடியாக ஒரு நல்ல கதையில் நான் நடிக்க இருக்கிறேன். இப்படத்தினைத் தொடர்ந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு