ஏப்ரல் 09, அரசியல் என்றாலே அதில் சினிமா இல்லாமல் இன்றைய அரசியல் இல்லை என்றாகிவிட்டது. இந்த சூழலில் இந்தியாவின் 15 வது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் எதிர்பார்ப்போடு ஏற்பாடாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும், பெரும் பின்னணி உடையவர். இந்நிலையில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, சமீபத்தில் சந்தித்து பேசினார். இதனால் அவர் பா.ஜ.க-விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. .
இதுகுறித்து அமிதாப்பிடம் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது உண்மையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், எந்த அரசியல்வாதியை சந்தித்து பேசினாலும், அவரை நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது. அவர்களது கொள்கைகளையும் நான் ஆதரிப்பதாக அர்த்தமாகி விடாது என்று அதிரடியாக கூறினார்.
“விதி யாரை விட்டது”
![]()

