deeeee

புதுதில்லி: 10.04.2014 வியாழன்.

நாடு முழுமைக்குமான தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் 15 வது மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் தில்லியில் உள்ள  7  தொகுதிகளுக்கும் கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்துவருகிறது..

மேலும் ஹரியானா, பீகார், மகாராஷ்ட்ரா, ஒடிஷா, உத்திர பிரதேசம் லச்சத்தீவு உள்ளிட்ட மாநிலங்களில் 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் குறிப்பிடும் படியாக தில்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல், சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தில்லி மாநில பாரதிய ஜனதா தலைவர் ஹர்ஷ்வர்தன் போட்டியிடுகிறார்.

Loading