புதிய கட்சிகளை வாக்காளர்கள் நம்பகூடாது! : கருணாநிதி அறிவுரை!

kalaingnar

 

விழுப்புரம்:11.04.2014 வெள்ளி.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பதவிகளைப் பெறுவதற்காக உருவாகியுள்ள புதிய கட்சிகளை பொதுமக்கள் ஆதரிக்கவோ, பொருட்படுத்தவோ கூடாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆரணி ஆர்.சிவானந்தம், கள்ளக்குறிச்சி ரா.மணிமாறன், விழுப்புரம் கோ.முத்தையன் இவர்களை ஆதரித்து மரக்காணம் சந்தைதோப்பு பகுதியில் வியாழக்கிழமை அவர் பேசியது:

திமுக வெற்றி பெற்றால் மத்தியில் மதச்சார்பற்ற ஒரு ஆட்சி அமைய ஆதரவளிப்போம். (இலைமறை காயாக காங்கிரசுடன் கூட்டணி என்கிறார் )

தொழிலாளர்களின் தோழனாக, உழவர்களின் உற்ற நண்பனாக, பாட்டாளிகளின் எதிர்கால நலனுக்கான திட்டங்களை தீட்டிய திமுகவை நீங்கள் ஆதரிக்க வேண்டும். பதவிக்காக புதிய கட்சிகள் தற்போது உருவாகியுள்ளன.

அவைகளை நீங்கள் பொருட்படுத்தவோ, ஆதரிக்கவோ கூடாது என்றார் கருணாநிதி.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், கருணாநிதியின் துணைவியார் ராஜத்தி அம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு