நாயகன், துப்பாக்கி, பம்பாய் வரிசையில் “மும்பையில் ஒரு காதல்”.., திரைப்படம் ….

 

சென்னை:ஏப்ரல் 14,

mumbaiyil-oru-kathal

 

சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் கௌதம் வெங்கடேஸ்வரன். இவர் ‘மும்பையில் ஒரு காதல்’ என்ற படத்தை இயக்குகிறார்.

சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும் படங்களின் கதாநாயகன் தமன் குமார் இந்த படத்தின் நாயகனாகவும், தமிழில் அறிமுகமாக ஜென்சி மீனு நாயகியாகவும் நடிக்கிறார்கள். நாயகி ஜென்சி மீனு தேசிய விருது பெற்ற மலையாள திரைப்படம் குல்மொஹர்-ல் நடித்திருக்கிறார். துப்பாக்கி, நாயகன், பம்பாய்  போன்று ‘மும்பையில் ஒரு காதல்’ திரைப்படமும் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இது முழுக்க முழுக்க காதலை கொண்டாடும் படம். படத்தின் பெரும்பகுதி மும்பையிலும், ஒரு சில பகுதிகள் லண்டன், நியூயார்க் மற்றும் சென்னையிலும் படமாகிறது. படத்தின் ஒளிப்பதிவாளர்களாக ஸ்மிரிதி.ஜி, விஜய்.வி, ராஜ்குமார் பணியாற்றுகின்றனர்.

இவர்களுடன் இணைந்து இயக்குநர் கௌதம் வெங்கடேஸ்வரனும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு கமல்.ஜி. பாடல்கள், முருகன் மந்திரம். டாக்கிங் க்ரோஸ் பிலிம்ஸ், மற்றும் வெங்கி பிக்சர்ஸ் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. கலர்ஃபுல்லான அதே சமயம் வித்தியாசமான காதல் திரைப்படமாக வளர்ந்து வருகிறது “மும்பையில் ஒரு காதல்”.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு