பிரதமராகும் அனைத்து தகுதிகளும் ராகுலிடம் உள்ளன: லல்லு பிரசாத் சொல்கிறார்

lallu-prasad-yadav

பாட்னா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘பிரதமர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும், ராகுல் காந்தியிடம் உள்ளதாக அக்கட்சித்தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “எந்த ஒரு தனிப்பட்ட இனத்துக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதில்லை. அந்த வகையில் நரேந்திர மோடியை விட, ராகுல் காந்தியே சிறந்தவர். நாட்டின் உயர்ந்த பதவிக்கு (பிரதமர்) தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன” என்றார்.

மேலும் வருகிற தேர்தலில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களிடம் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடப்போவதாகவும் லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

By True Tamil

ஜனவரி 17, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு