jawahirullah

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நேற்று, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என, மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, பொதுச் செயலர் ஜவாஹிருல்லா, இணை செயலர் ஆருண், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலர் அப்துல்சமது, துணைத் தலைவர் குனங்குடி அனிபா ஆகியோர், நேற்று, கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், மைதீன்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வும் இணைய வேண்டும்.  மதசார்பற்ற அணிகள் ஒரே அணியில் இருக்க வேண்டும். தே.மு.தி.க., வை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Loading