வருங்கால கணவருக்காக சின்மயி பாடிய ‘ஜில்’ பாடல்!

chinmayi

மே1, ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் மயிலு, ஞாபகங்கள் ஆகிய படங்களை இயக்கிய எம்.ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி.

இப்படத்தில் நாயகனாக புதுமுகம் வீரா அறிமுகமாகிறார். நாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய படத்துக்கு ரமேஷ் விநாயகம் இசையமைக்கிறார்.

இந்நிலையில் மொசக்குட்டி படத்தில் ஒரு பாடலை பாடகி சின்மயி பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து இயக்குநர் ஜீவனும் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகமும் சின்மயியை வரவழைத்தனர். அவரும் ஸ்டூடியோவிற்கு வந்து பாடுவதற்காக மைக் முன் நின்று பாடல் வரிகளை வாங்கி பார்த்து அதிர்ச்சியாகி வெளியே வந்து விட்டார். அப்படி என்ன வரிகள் என்று பார்த்தால்…

‘வாடா டேய் எம்புருசா’ ‘நான் தாரேன் புதுப்பரிசா’ ‘ஓம் போல பேரழகா பத்து பத்தா பெத்து தாரேண்டா’.

இந்த பாடலைப் பாட மிகவும் யோசித்தார். உடனே இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் முழுப் பாடலையும் பாடிக் காட்டியதும், சின்மயி மிகவும் மகிழ்ச்சியாகி இந்தப்பாடல் உண்மையிலேயே வரப்போகும் என் கணவருக்கு என்னோட புதுப்பரிசாகத்தான் இருக்கும். என் கேரியரிலும் இது முக்கியமான பாடலாக இருக்கும் என்று கூறி இந்தப்பாடலை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி என மகிழ்ச்சியோடு மிகவும் உற்சாகமாக பாடிக்கொடுத்தார். பின் அவரோடு இணைந்து ஹரிசரணும் பாடினார்.

பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது என்று இசை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் மொத்த யூனிட்டும் பாடலை கேட்டு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி…..

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு